×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்

பாபநாசம், மே 21: பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு மனோகரன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் காதர் ஹூசேன், ஒன்றியக்குழு ஷேக் அலாவுதீன், முருகேசன், சங்கர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலிமையான போராட்டங்களை நடத்துவது. தொடர் மின் வெட்டு, குறைந்தழுத்த மின்சாரம், 24 மணிநேர மும்முனை மின்சாரம் வழங்ககோரி பாபநாசம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாபநாசம் நகர செயலாளர் முரளி நன்றி கூறினார்.


பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலில் கண்ணாடி பல்லக்கில் சுவாமி புறப்பாடு

திருவையாறு, மே 21: கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலில் கண்ணாடி பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. திருவையாறு அடுத்த கண்டியூர் பிரம்மகண்டீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றம் கடந்த 9ம் தேதி நடந்தது. இதைதொடர்ந்து தினம்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 13ம் தேதி சுவாமி தன்னைதானே பூஜித்தல் நடந்தது. நேற்று கண்ணாடி பல்லக்கில் பிரம்மசிரகண்டீஸ்வரர் மங்களாம்பிகையுடன் அமர்ந்து வீதியுலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 23ம் தேதி அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. பாபநாசம்: பாபநாசம் அடுத்த ராஜகிரி மகாகரம் தந்த முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 19ம் தேதி குடமுருட்டி ஆற்றின் கரையிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல் பாபநாசம் திருப்பாலைத்துறை வீரமாகாளியம்மன் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாபநாசம் அடுத்த மட்டையாந்திடல் ஈஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. கடந்த 18ம் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்து வபந்தனர். 19ம் தேதி அம்மன் வீதியுலா நடந்தது.

Tags : Communist Party of India ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்