×

குலமாணிக்கம் இஞ்ஞாசியார் ஆலய தேர்பவனி

அரியலூர், மே 21: குலமாணிக்கம் இஞ்ஞாசியார் ஆலய தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள இஞ்ஞாசியார் ஆலய தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கடந்த 10ம் தேதி பங்குத்தந்தை செல்வராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு விழா கொடியேற்றப்பட்டது. அதைதொடர்ந்து தினம்தோறும் நவநாள் திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. கன்னி மாதா, இஞ்ஞாசியார், வனத்து சின்னப்பர், உயிர்த்த ஏசு, மிக்கேல் சமனஸ் ஆகியோரின் சொரூபங்கள் 5 தேர்களில் வைக்கப்பட்டது. பின்னர் தேர்பவனி முக்கிய தெருக்கள் வழியாக  ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். தேர்பவனியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Tags : Gulmakinam Theologian Temple Derpavani ,
× RELATED அகல்விளக்கு விற்பனை ஜோர் கூட்டுறவு துறையில்