பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

அரியலூர், மே 21: பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு  காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறையையடுத்து பள்ளி, கல்லூரிகள் ஜூன் மாதத்தில் திறக்கப்படும்.அப்போது  மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லாததன் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும்,  நின்று கொண்டும் செல்கிறார்கள். ஆகையால் மாணவர்கள் தவறி விழுந்து விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது, எனவே காலை மற்றும் மாலை இரு நேரமும் கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரி போக்குவரத்து அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்  மணியன் கோரிக்கை  விடுத்துள்ளார்.

Tags : college students ,school ,
× RELATED புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு