×

ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

ஜெயங்கொண்டம், மே 21: ஜெயங்கொண்டம் வாரச்சந்தை வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து விளைவிக்க செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இவற்றை ஆண்டிமடம், மீன்சுருட்டி தா.பழூர், பொன்பரப்பி உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கி செல்வர். உணவு பாதுகாப்பு துறைக்கு ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் கார்பைடு கல் போட்டு பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகின்றன என்ற ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சசிகுமார் தலைமையில் ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரை மேற்பார்வையாளர் இந்துமதி உள்ளிட்ட குழுவினர் வாரச்சந்தையில் உள்ள பழக்கடை, காய்கறி கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது சில கடைகளில் கார்பைடு கல்லால் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அவ்வாறு செய்யப்பட்ட பழங்களையும், சாயம் ஏற்றப்பட்ட பச்சை பட்டாணி விற்பனைக்கு வைத்திருந்ததையும், சாயம் ஏற்றப்பட்ட குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வத்தல்களை பறிமுதல் செய்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்களையும் பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு அபராதமும் விதித்தனர். மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Jeyangondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி பலி