தென்னம்புலத்தில் மழை வேண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வேதாரண்யம், மே 21: வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம்  மழை மாரியம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 20ம்  தேதி  பூச்செறிதல், காப்பு கட்டுதல நிகழ்ச்சியுடன் தொடங்கி நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
நேற்று மழை மாரியம்மனுக்கு பக்தர்கள் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்தனர் முன்னதாக பக்தர்கள் விரதமிருந்து பால், இளநீர், பன்னீர் மற்றும் பல்வேறு பொருட்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம்  நடத்தினர். தொடர்ந்து அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மழைவேண்டி பிரார்த்தனை செய்தனர்.

Tags : Shiva ,south ,
× RELATED பொய்யுரைத்த தாழம்பூவுக்கே சிவபூஜையில் முதலிடம்!