×

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க கோரிக்கை

மயிலாடுதுறை, மே 21:  மயிலாடுதுறை பொதுநல வழக்கறிஞரும் பாஜகவின் தேசியகுழு உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் ரயில்வே நிர்வாகத்திற்கு விடுத்துள்ள மனுவில்தெரிவித்திருப்பதாவது: 185 கி.மீ. மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, கரைக்குடி ரயில்பாதை படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது முற்றிலும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரயில் சேவை துவக்கிட தயார் நிலையில் உள்ளது. 7 ஆண்டுகளாக அகல ரயில்பாதை பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் ரூ.800 கோடி செலவில் அகல ரயில்பாதையாக அமைக்கப்பட்ட 185 கி.மீ. மயிலாடுதுறை காரைக்குடி ரயில்தடம், நாட்டின் தொண்மையான ரயில் தடங்களில் ஒன்றாகும்.  ஏற்கனவே ‘போட்மெயில்’ என அழைக்கப்படும் சென்னை தனுஷ்கோடி விரைவு ரயில் மீட்டர்கேஜ் காலத்தில் இந்த பாதையில்தான் இயக்கப்பட்டது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை, அறந்தாங்கி, ஆகிய பகுதி  மக்கள் சென்னை சென்றுவர 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பட்டு வந்தது.

மத்திய அரசின் ரூ.800 கோடி முதலீட்டுக்கு வருவாய் ஈட்டும் வண்ணம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், முத்துபேட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களையும் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பரமக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு காவிரி டெல்டா மக்கள் சென்றுவரும் வகையில், ராமேஸ்வரத்திலிருந்து புதிய ரயில் முனையமாக உருவாகியுள்ள சென்னை தாம்பரத்துக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும்.  தற்போது கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை மட்டும்  இயங்கும் பாசஞ்சர் ரயில் சேவைக்கு மே 7ம் தேதி  தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதால் மேற்படி திருவாரூர்-காரைக்குடி பாசஞ்சர் ரயில் சேவை தேர்தல் முடிவுகளுக்கு முன்பே இயக்கிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Mayiladuthurai ,Rameswaram ,Thiruvarur ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...