×

கோயில் திருவிழா சீசனில் களை கட்டும் வாழைத்தார் விற்பனை

கரூர், மே 21:  திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் வாழைத்தார்கள் அதிகம் விற்பனையாகிறது. கரூர் மார்க்கெட் அருகே வாழைக்காய் மண்டி உள்ளது. கரூர் மாரியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் கரூர்மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  தினமும் 50க்கும் மேற்பட்ட கிராம கோயில்களில் திருவிழா நடைபெற்றுவருகிறது. இதனால் வாழைப்பழம் தேவைஅதிகரித்துள்ளது. கரூர் வாழைக்காய் மண்டியில் வழக்கத்தை விட அதிகமாக விற்பனைக்காக வாழைத்தார்கள் வரவழைக்கப்படுகின்றன. விலையில் எந்த மாற்றமும் இல்லை. எனினும்வழக்கமாக சிறுவியாபாரிகள் 2தார்கள் வாங்குபவர்கள் இப்போது இந்த சீசனில் 4தார்களை வாங்கி செல்கின்றனர் என மண்டிக்கடையினர் தெரிவித்தனர்.

Tags : festivals ,temple festival ,
× RELATED ஹோலி பண்டிகை கொண்டாட்டம்