×

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பாக பூட்டி சீல்வைப்பு

கரூர், மே 21: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 84.33 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களால் நேற்று முன்தினம் இரவு முதல் கொண்டு வரப்பட்டது. இயந்திரங்களின் விபரம் கணினியில் பதிவு செய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
பின்னர், வாக்கு எண்ணிக்கை மையமான தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நேற்று வேட்பாளர்கள், முகவர்கள் இடையே வாக்குப்பதிவுஇயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படடுள்ள விபரம் குறித்தும், பாதுகாப்பு அறைகள் பூட்டிசீல் வைக்கும் முறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹரிபிரதாப் சாகி, கரூர் எஸ்பி விக்ரமன், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி, வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்புஅறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில் தேர்தல் அலுவலர் முத்திரை மற்றும் வேட்பாளர்களின் முத்திரை கொண்டு சீல் வைக்கப்பட்டது. ஆர்டிஓ சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் ஈஸ்வரன், வேட்பாளர்கள், பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags : constituency ,Aravakurichi ,sealing machine ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...