×

குடிநீர், சொத்து வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்

நெல்லிக்குப்பம், மே 21:  நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர், சொத்து வரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீருக்கான வரியை நகராட்சி வசூல் செய்து வருகிறது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான பல இடங்களில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் கடை நடத்துபவர்கள் அதற்கான கடை வாடகையை சரியான முறையில் செலுத்துவதில்லை. தற்போது நெல்லிக்குப்பம் நகராட்சி மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது.

இதனால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி கட்டணம், தொழில் வரி, கடை வாடகை மற்றும் உணவு கலப்பட தடை சட்ட லைெசன்ஸ், திருமண மண்டபம் வரி பாக்கி அனைத்தையும் நகராட்சிக்கு உடனடியாக செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகராட்சி சட்டங்களின் படி பல்வேறு நடவடிக்கை மேற் கொள்வதுடன் குடிநீர் வரி, சொத்து வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்பு முன் அறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது