×

பெரும்புதூர் அருகே கார் உதிரிபாக ெதாழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பெரும்புதூர், மே 21: பெரும்பதூர் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்ட தனியார் கார் தொழிற்சாலை ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எந்தவித அறிவிப்பும் இன்றி இயந்திரங்களை இருங்காடுகோட்டையில் உள்ள வேறு ஒரு தொழிற்சாலைக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தொழிற்சாலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு, ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நீதிமன்ற ஆணைப்படி தொழிற்சாலையில் உள்ள, இயந்திரங்களை அப்புறப்படுத்த தொழிற்சாலை நிர்வாகம் பணிகளை துவங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், தொழிற்சாலை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது, ஊழியர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்படாததால் போலீசாருக்கும், ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில், ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

Tags : Workers' Workers' Car Workers Near Carparkuthur ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...