வெளிமாநிலங்களில் இருந்து வந்து திருவள்ளூரில் கஞ்சா விற்பனை அமோகம்

திருவள்ளூர், மே 21: கஞ்சா தாராளமாக கஞ்சா விற்பனை செய்கின்றனர். அவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருமழிசை, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, உ.பி., பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலத்தவர்களும் மற்றும் நைஜீரியா, வங்கதேசம், நேபாளம் உட்பட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள்.

இவர்கள் போலீசாரின் கண்காணிப்பை மீறி சில டாஸ்மாக் பார்களில் மறைமுகமாக விற்கும் கஞ்சா பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், காக்களூர் ஏரிக்கரை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில்  கஞ்சா விற்பனை மறைமுகமாக நடந்து வருகிறது. இதை வாங்கி உபயோகிப்பவர்களில் பலர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சாவிற்பவர்களை போலீசார் பிடித்தாலும், முக்கிய நபர்கள் சிக்காமல் தப்பித்து விடுகின்றனர். சமீபத்தில், திருவள்ளூர் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலைய பகுதியில் விற்பனைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து 6 கிலோ கஞ்சா கொண்டுவந்த இருவரை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆனாலும், சில கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரின் கண்களில் படாமல் ஆந்திராவில் இருந்து ரயில், கார், பஸ் மூல கஞ்சா திருவள்ளூர் கொண்டு வருகின்றனர். அங்கிருந்து பிரித்து கொடுத்து பொட்டலங்கள் பகுதிவாரியாக சென்றடைகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில்கள், பஸ்கள் மூலம் திருவள்ளூர் வரும் பிற மாநிலத்தினரை போலீசார் கண்காணிக்க வேண்டும். இவ்வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்கள், வெளியில் வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ‘’டாஸ்மாக்’’ பார்களில் மது அருந்த செல்வது போல் சென்று, அங்கும் மறைமுகமாக கஞ்சா பொட்டலங்கள் விற்கப்பட்டு வருகிறது. எனவே, கஞ்சா, குட்கா போன்றவை விற்கப்படுவதை மாவட்ட போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

Tags : outskirts ,town ,kanja ,Tiruvallur ,
× RELATED மணலி புதுநகர் அருகே சாலையை...