கோவில்பட்டியில் ராஜிவ்காந்தி ஜோதி ரத யாத்திரைக்கு வரவேற்பு

கோவில்பட்டி, மே 19: நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க வலியுறுத்தி பெங்களூரில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த ராஜிவ்காந்தி ஜோதி ரத யாத்திரைக்கு காங்கிரசார் வரவேற்பு அளித்தனர். இந்தியாவில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து ஹரிகோட்டா வரை ராஜிவ்காந்தி ஜோதி ரதயாத்திரை கர்நாடகா மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் தலைமையில் நடக்கிறது. கடந்த 15ம்தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரை நேற்று கோவில்பட்டி வந்தது. பயணியர் விடுதி முன்பு ரதயாத்திரைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர தலைவர் சண்முகராஜா, மாவட்ட பொதுசெயலாளர் திருப்பதிராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், உமாசங்கர், வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி, ராமச்சந்திரன், நல்லமதி, ராஜேந்திரன், தர்மர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rajiv Gandhi Joti Rath Yatra ,Kovilpatti ,
× RELATED கூடுதல் பணியாளர்கள் நியமிக்க கோரி...