மார்த்தாண்டம் அருகே மருமகளுடன் தகராறு: மாமியார் தற்கொலை

மார்த்தாண்டம், மே 19: மார்த்தாண்டம் காளைச்சந்தை பஸ் நிலையம் அருகே புளியமூடு பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் என்ற இன்பம்(53). இவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. செல்லம்மாள் மருமகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மருமகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்பம் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இதைக்கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து சடலத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : dispute ,daughter-in-law ,Mother-in-law ,Marthandam ,suicide ,
× RELATED மாமியாருக்கு வெட்டு