×

ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி

ஊட்டி, மே 19: ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகமும் இணைந்து கோடை விழா கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்தார். கூடுதல் முதன்மை செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் வாழும், தோடர், கோத்தர், பெட்ட குரும்பர், முள் குரும்பர், இருளர் பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, படுகர் இன மக்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் முள் குரும்பர்களின் கோலாட்டம் எருமாடு அச்சுதா தலைமையில் நடந்தது. தோடர் நடனம் சத்யராஜ் தலைமையிலும், இருளர் நடனம் மாதன் தலைமையிலும், கோத்தகர் நடனம் உதயகுமார் தலைமையிலும் நடந்தது.  இதனை கவர்னர் மற்றும் அதிகாரிகள் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில், தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங்பேடி, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட நீதிபதி வடமலை, மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், நீதிபதி சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty ,Rajbhavan ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...