கஞ்சா கடத்திய 2 பேர் கைது

பாலக்காடு, மே 19 :  கம்பம் தேனி பகுதிகளை சேர்ந்தவர்கள் ஜெயகுமார் (27), விக்னேஷ்வரன் (25) ஆகிய இருவரும் கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி வந்த அரசு பஸ்சில் நேற்று பயணித்துள்ளார். கேரள-தமிழக வாளையார் டோல்கேட் அருகே பாலக்காடு கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜெயகுமார், விக்னேஷ்வரனும் பஸ்சில் தப்பிக்க முயற்றனர், அப்போது அதிகாரிகள் அவர்களை தடுத்து, விசாரணை நடத்தியதில் 6.2 கிலோ கஞ்சா தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்திவந்தது தெரியவந்தது, பின் இருவரையும்  கலால்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


சர்க்யூட் பஸ் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

ஊட்டி, மே 19: சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா தலங்களை குறைந்த கட்டணத்தில் பார்வையிட ஏற்றவாறு போக்குவரத்து கழகம் பார்க் அண்ட் ரெய்டு மற்றும் சர்க்யூட் பஸ்களின் எண்ணிக்கையை 28 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்ற போதிலும், மே மாதம் விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் நலன் கருதியும், தனியார் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் பஸ்கள் நகருக்குள் அனுமதிக்கப்படாததாலும், அந்த பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல ஏற்றவாறு போக்குவரத்து கழகம் சர்க்யூட் பஸ் மற்றும் பார்க் அண்ட் ரெய்டு பஸ்களை அறிமுகம் இயக்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப் பார்க்கலாம் என்பதால் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு அதிகம் உள்ளது. சர்க்யூட் பஸ்கள் தற்போது 28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களையும் இந்த பஸ்கள் வலம் வருகின்றன.

இதுமட்டுமின்றி பார்க் அன்ட் ரெய்டு பஸ்கள் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்த பஸ்கள் ஆவின் தனியார் பஸ் நிறுத்தம், காந்தல் மற்றும் கால்ப்லிங்ஸ் தனியார் பஸ் நிறுத்தம் வரை சென்று வருவதால் சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றியும், குறைந்த கட்டணத்திலும் அனைத்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் இருந்து கோவைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பூங்கா மற்றும் படகு இல்லம் இடையோ பார்க் அன்ட் ரெய்டு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

Tags : Kanja ,
× RELATED காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச்சூடுஇரண்டு பேர் காயம்