×

கண்டி மகாலிங்கையா கோயில் கும்பாபிஷேகம்

மஞ்சூர்,  மே 19: மஞ்சூர் அருகே உள்ள கண்டியில் மகாலிங்கையா கோயில் உள்ளது.  பழமைவாய்ந்த இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று  வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் கோயிலின்  குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கணபதி பூஜையுடன் பல்வேறு ஹோமங்கள்  நடத்தப்பட்டது. தொடர்ந்து 108 குடங்களில் புனித நீர் ஊர்வலமாக கொண்டு  வரப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை  தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது.  இதேபோல் அருகில் உள்ள ராமர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு மகாலிங்கையா பஜனை  சபை சார்பில் ‘ஜென ஒந்து அடதே’ என்ற படுக சமூக நாடகம் மற்றும் நடனம்  கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஊட்டி எம்.எல்.ஏ. கணேசன் உள்பட 14  ஊர்களை சேர்ந்த படுகரின மக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை  முள்ளிமலை ஊர் தலைவர் போஜன் தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Kandy Mahalingam Temple ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்