×

பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டு

ஈரோடு, மே 19: ஈரோடு மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானி ஆற்றில் தண்ணீர் திருடப்பட்டு வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதரமாக பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றிலும், பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பல ஹெக்டேர் விளை நிலங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் குளம், குட்டைகள் உள்ள நீர் வறண்டு போகும் நிலை உருவாகியுள்ளது. இதில் தற்போது பவானி ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் குறைந்தளவு தண்ணீர் ஓடுகிறது. இந்த தண்ணீரை சிலர் மின் மோட்டார் மற்றும் ஆயில் மோட்டார்கள் மூலம் ஆற்றில் குழாய்களை பொருத்தி நேரடியாக தண்ணீரை திருடி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் நீரினை உறிஞ்சி திருட்டு தனமாக வணிக ரீதியாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே, தண்ணீரை திருடுவோர்கள் மீது நடவடிக்கை எடுத்து மோட்டார்களை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முன் வர வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : river ,Bhavani ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை