×

பாராலிம்பிக் பேட்மிண்டன்: உ.பி. கலெக்டர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஆடவருக்கான எஸ்எல்-4 பிரிவில் பேட்மிண்டனுக்கான இறுதி ஆட்டம் நடந்தது. இன்று நடந்த பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸ், சுகாஷ் யத்திராஜை 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  18 பதக்கங்களை வென்றுள்ளது.மேலும், 38 வயதான சுஹாஷ் உத்தரப்பிரதேசம் கவுதம் புத்தநகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார். பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி வென்ற சுகாஷுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்….

The post பாராலிம்பிக் பேட்மிண்டன்: உ.பி. கலெக்டர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Tokyo ,16th Paralympic Games ,Japan ,Paralympics ,Tokyo… ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்