×

ரயில் பாதையில் மாடு மேய்க்க தடை

கோவை, மே 19: கோவை ஈரோடு, கோவை மேட்டுப்பாளையம் மற்றும் கோவை பாலக்காடு ரயில் மார்க்கத்தில் தினமும் 70க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இயங்குகிறது. ரயில் பாதையோரம் உள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் ரயில் பாதைக்கு இடையே புற்கள் மேயும் போதும், ரயில் பாதை கடக்கும் போது ரயில் மோதி இறந்து விடுகின்றன. குறிப்பாக இருகூர், சூலூர், சோமனூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, போத்தனூர், மதுக்கரை, எட்டிமடை, வாளையார் ரயில் பாதையில் ரயில் மோதி ஆடு, மாடுகள் அதிகளவு இறப்பதாக தெரியவந்துள்ளது.

ரயில் பாதையில் நடப்பது, மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்புவது கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை அருகே குடியிருப்பு அதிகம் இருந்தால், மக்கள் பாதையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. அங்கே இரும்பு தடுப்பு அமைக்க தென்னக ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் காட்டூர், ரத்தினபுரி, பீளமேடு, சிங்காநல்லூர், சுங்கம் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள ரயில்பாதையோரம் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருகூர், சூலூர், சோமனூர் ரயில் பாதையோரம் இரும்பு தடுப்பு வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு