×

சென்னிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சென்னிமலை, மே 19: சென்னிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு படி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. சென்னிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு படி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. சென்னிமலையில் உள்ள அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் சார்பில் வைகாசி விழாவை முன்னிட்டு காவிரி நதிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் நேற்று காலை சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் இருந்து தீர்த்த குடங்களுடன் படிக்கட்டுகள் வழியாக முருகன் கோயிலுக்கு சென்றனர்.

அங்கு காலை 10 மணிக்கு மேல் விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. மேலும் கலச அபிஷேகம் மற்றும் 108 சங்கு பூஜை ஆகியவை நடந்தது. இதில் பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக மாலை 4 மணிக்கு மேல் சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தன. அதைத்தொடர்ந்து சாமிகள் புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு அருணகிரிநாதர் மண்டபத்தில் விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
படி பூஜை:

சென்னிமலை சிவஞான சித்தர் பீடம் சார்பில், வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று படி பூஜை நடந்தது. இதற்காக காலை 6 மணி முதல் சரவண சித்தர் தலைமையில் தன்னாசியப்பன் கோயில் வரை உள்ள சுமார் 1600 படிக்கட்டுகளுக்கு மஞ்சள் நீர், பால், பன்னீர் தெளித்து, விபூதி, குங்குமம் இட்டு, வாழை இலை போட்டு அதில் வெற்றிலை, பாக்கு, கனி வகைகள் வைத்து படிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் இமயமலை, காவிரி, கங்கை, நர்மதை, தாமிரபரணி ஆகிய இடங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chennimalai Murugan Temple ,
× RELATED சென்னிமலை முருகன் கோயில் டோல்கேட்...