×

பழங்குடியின குழந்தைகளுக்கு கோடை பயிற்சி முகாம்

ஈரோடு, மே 19:  பள்ளி இடைநின்ற பழங்குடி குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் குழந்தைகளை விவசாய பணிகளில் ஈடுபடுத்துவது, கூலி வேலைகளுக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பது போன்றவை அதிகரித்து வருகிறது. இதே போல பள்ளிக்கு வரும் குழந்தைகள் இடைநின்றலும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையிலும், கல்வி மீதான ஈர்ப்பு ஏற்படும் வகையில் பழங்குடி கிராமங்களில் ஆண்டுதோறும் கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் இந்தாண்டு பயிற்சி முகாம் வாண்டுகள் கொண்டாட்டம் என்ற பெயரில் பர்கூர் மலை கொங்காடை கிராமத்தில் வருகின்ற 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பயிற்சி முகாமில் ஆட்டக்கலை, புகைப்படக்கலை, நடனம், பாடல், கதை சொல்லல், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மரபு விளையாட்டு, நாடகம், ஓவியம், ஓரிகாமி, கானகப் பயணம், வில் அம்பு எரிதல், ஆவணப்படம் திரையிடல், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : training camp ,children ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்