×

வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குவாதம் வேண்டாம் கலெக்டர் அறிவுரை

திண்டுக்கல், மே 19: வாக்கு எண்ணிக்கையின் போது அலவலர்கள், முகவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என கலெக்டர் வினய் அறிவுரை வழங்கியுள்ளார். ‘திண்டுக்கல் மக்களவை தொகுதி, நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணிக்கு, 386 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி நடந்தது. இதில் கலெக்டர் வினய் பேசியதாவது: வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகளும், அரை மணிநேரம் கழித்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பான பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் உள்ளன.

முகவர்களிடம் விளக்கம்:
சிலர் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என கூறுகிறார்கள். எனவே வாக்கு எண்ணிக்கையின் போது, எந்தவித குற்றச்சாட்டுக்கும் அலுவலர்கள் இடமளித்து விடக்கூடாது. வேட்பாளர்களின் முகவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வாக்குவாதம் செய்ய வேண்டாம். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட மேஜைக்கு வர வேண்டியவையா என்று சோதிக்க வேண்டும். இதற்காக இயந்திரத்தில் இருக்கும் எண், சீல் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உடனே உதவி தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க வேண்டும். ஒவ்வொரு நடவடிக்கையையும் முகவர்களிடம் விளக்கம் வேண்டும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிந்து சரி பார்த்து விபரத்தை அறிவித்த பின்னரே, அடுத்த சுற்று எண்ணிக்கையை துவங்க வேண்டும்.

மாதிரி வாக்குபதிவு:
இயந்திரங்களில் கேளாறு ஏற்பட்டால், உதவி தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளும், வாக்குச்சாவடியில் பதிவான மொத்தம் வாக்குகளும் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும். ஏதேனும் 2 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் மறுஎண்ணிக்கை நடத்தப்படும். எனவும் மிகவும் கவனமாகவும், சரியாகவும் வாக்குகளை எண்ண வேண்டும். ஒரு சில வாக்குசாவடிகளில் மாதிரி வாக்குகளை அழிக்காமல் பதிவு செய்து இருக்கலாம். ஒட்டன்சத்திரம் தொகுதியில் வடகாடு கிராமத்தில் மாதிரி வாக்குபதிவை சேர்த்து குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோன்ற சூழலில் முகவர்கள் உதவி தேர்தல் அலுவலரிடம் விபத்தை தெரிவிக்க வேண்டும். மாதிரி வாக்குகள் சேர்க்கப்பட்டு இருந்தால், ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பணி ஒதுக்கீடு:
தேர்தல் பணியில் இருப்பவர்கள், பிற வாக்குசாவடியில் வாக்கு அளித்து இருப்பார்கள். எனவே எண்ணிக்கையில் கவனமாக இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பே, வாக்கு பதிவை உறுதி செய்யும் சீட்டுகள் எண்ணப்படும். இதற்கு ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், முகவர்களிடம் கட்டாயம் கையெழுத்து பெற வேண்டும். வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு மே 23ம் தேதி காலை 5 மணிக்கு, பணி ஒதுக்கீடு செய்யப்படும். முன்னதாக மையத்திற்குள் வந்து விட வேண்டும். செல்போன் கொண்டு வருவதை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும். கவனமாக வாக்கு எண்ணிக்கையில் அலுவலர்கள் ஈடுபட வேண்டும்’ என்றார். இதில் டிஆர்ஓ வேலு, சப்கலெக்டர் அருண்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், சதீஸ்பாபு ஆர்டிஓ ஜீவா மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : vote ,Collector ,
× RELATED ஒரு ஓட்டு நாட்டின் தலைவிதியை மாற்றும்: உ.பி முதல்வர் யோகி சொல்கிறார்