×

மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

பழநி, மே 19: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணையின் படி பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மற்றும் ஏனைய மனுக்கள் பெறப்பட்ட உடன் மனுவினை பெற்றதற்காக அனைத்துத்துறை அலுவலர்களும் ஒப்புதலை அனுப்ப வேண்டும். பெறப்பட்டுள்ள மனுவில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் விரைந்தும், மற்றவைக்கு 1 மாத காலத்திற்குள்ளும் தீர்வு செய்யப்பட வேண்டும். தீர்வானது பேசும் வடிவிலான விரிவான பதிலுரையாக இருக்க வேண்டும். கோரிக்கைகளை தீர்வு செய்யப்படுவதற்கு கூடுதல் காலஅவகாசம் தேவைப்பட்டால் மனு தீர்வு செய்ய ஆகும் காலத்தை எழுத்து வடிவில் தெரிவிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினய் கூறியிருப்பதாவது, ‘அரசாணையில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி அனைத்துறை அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு ஒப்புகையும், தீர்வுகளும் செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைக்க பெறாத பொதுமக்கள் தங்களது புகார்களை வாட்ஸ் அப் மூலம் 75988 66000 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Tags : Action Collector ,
× RELATED மனையை அபகரித்து மிரட்டல் விடுத்த...