×

கொடைரோட்டில் பூட்டியே கிடக்கும் பணியாளர் குடியிருப்புகள்

செம்பட்டி, மே 19: கொடைரோடு ரயில்வே புதிய குடியிருப்புகளை விரைவில் திறக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைரோடு ரயில்நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். கொடைக்கானல் செல்வதற்கு வசதியாக ஆங்கிலேயர் காலத்தில் இந்த ரயில் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு 30க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர் குடியிருப்புகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட இவ்வீடுகள் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் வீடுகள் அனைத்தும் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் கொடைரோடு ரயில்வே நிலையத்திற்குட்பட்ட ஆளில்லா ரயில்வே கேட்கள் அனைத்தும் பணியாளர்களுடன் கேட்டுகள் அமைக்கப்பட்டது.

இதனால் இந்நிலைய பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக 30 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் கட்டுமான பணிகள் முடிந்தும் குடிநீர், மின்வயர் இணைப்பு போன்ற சிறு, சிறு வேலைகளை செய்யாமல் உள்ளனர். இதனால் குடியிருப்புகள் கட்டி 3 ஆண்டுகளாகியும் பயன்பாடின்றி சிதிலமடையும் நிலை உள்ளது. மேலும் இங்குஇரவுநேரங்களில் சமூகவிரோதிகள் தங்களது கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் புதிய குடியிருப்புகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை