கால்பந்து போட்டி புனித மரியன்னை பள்ளி வெற்றி

திண்டுக்கல், மே 19: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், மேற்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் 26வது கோபாலகிருஷ்ண நாயுடு நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டி திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் நடந்தது. இதில் புனித மரியன்னை, எஸ்எஸ்எம் அகாடமி, சிலுக்குவார்பட்டி ஆர்சி, எஸ்எம்பிஎம் மெட்ரிக், வத்தலகுண்டு-அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக், பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, சிலுக்குவார்பட்டி ஆர்சி மேல்நிலைப்பள்ளியும் மோதின. பிடித்தது. இதில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், ஆர்சி மேல்நிலைப்பள்ளி 2ம் இடத்தையும் பிடித்தது. முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம், கோப்பை மற்றும் 2ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.3ஆயிரம் ரொக்கம், கோப்பையை மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன் வழங்கினார். இதில் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் நடராஜன், செயலாளர் ராஜையா, புனித மரியன்னை பள்ளி தாளாளர் ஜான், கால்பந்து கழக செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : St. Mary's School of Soccer Tournament ,
× RELATED கொடைக்கானல் மலைப்பாதையில் யானைகள் உலா வாகன ஓட்டிகள் உஷார்