×

கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி

பெரியகுளம், மே 19 : பெரியகுளத்தில் 60ம் வைரவிழா ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி மே 15ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் மே 21ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் தலை சிறந்த அணிகள் விளையாட உள்ளன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற உள்ளன. 3ம் நாள் மாலை நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு பாங்க் ஆப் பரோடா(விஜயா வங்கி) அணி 100 புள்ளிகள் எடுத்து எதிர்த்து  சென்னை கஸ்டம்ஸ் அணியினை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணி 104 புள்ளிகள் எடுத்து இந்திய தரைப்படை(கிரீன்) அணியை வென்றது.  திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அடுத்து நடைபெற வேண்டிய இரண்டு ஆட்டங்கள் இன்று காலை நடைபெற உள்ளன. 

Tags : Indian ,bank team ,basketball tournament ,
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்