×

கூத்தாநல்லூர்- பாண்டுக்குடி இணைப்பு பாலத்திற்கு செல்லும் பாதை கரடு முரடான அவலம்

கூத்தாநல்லூர், மே 19: கூத்தாநல்லூரில் இருந்து பாண்டுக்குடி செல்லும் இணைப்பு பாலத்திற்கு செல்லும் பாதை கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக இருப்பதால் அதனை சீர் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தாநல்லூரில் இருந்து பாண்டுக்குடி செல்ல வெண்ணாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்து தான் காக்கையாடி, சாத்தனூர், பாண்டுக்குடி, கொத்தங்குடி மற்றும் வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும். இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களும் பொதுமக்களும் சென்று வருகின்றனர். கூத்தாநல்லூரில் இருந்து இந்த பாலத்திற்கு செல்ல வி.பி.எம். சாலைக்கு அருகே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியே தான் மேற்கண்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். இந்த  சாலை தற்போது கப்பிகள் பெயர்ந்து கரடுமுரடாக நடப்பதற்கே ஏற்றதாக இல்லை. அதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையை கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்னரே சீரமைத்து தார் சாலையாகவோ, கான்கிரீட் சாவையாகவோ அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : connection bridge ,Koothanallur-Bandukudi ,
× RELATED மயானத்திற்கு சாலைவசதிகேட்டு சேறு,...