நாகையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

கீழ்வேளூர், மே 19:நாகையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டனர். நாகை எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில்  நாகை வெளிப்பாளையம் போலீசார் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, தேவி தியேட்டர் பகுதியில் தீவிர ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது  நாகை வெளிப்பாளையம் வ.ஊ.சி. தெருவை சேர்ந்த தேவதாஸ் மகன் தென்றல் (எ) தென்றலரசு (35) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து  தென்றலை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.100 கி.கி. கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Tags : kanja ,Nagam ,
× RELATED முதியவரை தாக்கியவர் கைது