×

பசுமை பள்ளத்தாக்கு பாழாகும் அவலம்

தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கிற்கென தனி பெயர் உள்ளது. காரணம் பொறியாளர் பென்னிகுக் முல்லைபெரியாறு அணையை கட்டினார். சொந்த செலவில் கட்டிய அவர் தேனிமாவட்டம் மட்டும் அல்லாமல் 5 மாவட்ட விவசாயமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை கட்டினார். இதனால்தான் இன்றும் நெல்வயல்கள், தென்னை, காய்கறி விவசாயம் அதிக ஏக்கர் பரப்பில் செய்யப்படுகிறது. தற்போது வீரபாண்டியில் இருந்து கம்பம், கூடலூர் வரை 7 இடங்களில் பைபாஸ் சாலை வருகிறது. இதில் பலநூறு ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் பசுமையாக தென்படும் கம்பம் பள்ளத்தாக்கில் எங்கு நோக்கினும் சாலைகள் என்ற நிலை உருவாக உள்ளது.

Tags : Green Valley ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில்...