×

காளையார்கோவில் அருகே குளமாக மாறிய சாலை

காளையார்கோவில், மே 17:  காளையார்கோவில் அருகே உள்ள மூர்த்திநகர், சோமசுந்தரநகர் செல்லும் தார்ச்சாலை சிறுமழைக்கே குளமாக மாறி வருகிறது.காளையார்கோவில் அருகே காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் மூர்த்திநகர், சோமசுந்தரநகருக்கு செல்லும் தார்ச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது தார் இருந்த இடமே தெரியாமல் ஜல்லிகள் மட்டுமே சாலையில் தெரிகின்றன. இந்தச் சாலையை மூர்த்திநகர் மற்றும் சோமசுந்தரநகரிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் . மேலும் 10 மீட்டருக்கு ஒரு இடத்தில் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. தற்போது பெய்த சிறுமழைக்கே சாலையை பயன்படுத்த முடியாத அளவுக்கு குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில்செல்லும் ஸ்கூல் வேன் மற்றும் டூவீலர் வாகனங்கள் விபத்தைச்  சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதை அறியாமல் நேற்று இரண்டு  கீழே விழுந்து காயமடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வெயில் காலத்தில் இச்சாலையில் சென்றால் ஜல்லிக்கற்கள் பாதங்களைப் பதம் பார்க்கின்றன. இதே போல மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சகதியாக மாறி வழுக்கி விடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை இதுவரையிலும் எந்த மராமத்து பணியும் நடைபெறவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனுக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறினர்.

Tags : road ,pond ,Kalaiyarko ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி