×

நம்புதாளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி

தொண்டி, மே 17: நம்புதாளை ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் இல்லாததால், இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனையை அணுகுவதால் அதிக செலவு செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். உடன் செவிலியரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுததியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருவாடானை தாலுகாவில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சி இதுவாகும். இப்பகுதி மக்களுக்கென ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பணிபுரிந்த செவிலியர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி மாறுதலில் சென்று விட்டார். அவ்வப்போது செவிலியர் வந்து போன நிலையில் ஒரு மாதமாக இங்கு செ விலியர் வருவது கிடையாது.

கர்ப்பிணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவோர் தொண்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இரவு நேரத்தில் உடல் நிலை பாதிக்கப்படுவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு செல்வதால் அதிக செ லவு செய்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். கிராமங்களில் செவிலியர்கள் உள்ள நிலையில் பெரிய ஊராட்சியில் செவிலியர் நியமிக்காதது தனியார் மருத்துவமனைகளுடன் அதிகாரிகள் கூட்டு சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. உடன் நம்புதாளைக்கென தனியாக செவிலியர் நியமிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுததுள்ளனர்.

இதுகுறித்து நம்புதாளை ஜீயாத்கான் கூறியது, கர்ப்பிணி தாய்மார்கள் அந்தந்த ஊராட்சியில் உள்ள சுகாதார நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்பது விதி. அதற்கு இங்கு ஆள் இல்லாமல் தொண்டிக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் அரசு மருத்துவமனை இல்லாததால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனையிலும் அதிகம் செலவாகிறது. மாற்றுப்பணிக்கு வந்த செவிலியரும் தற்போது வருவதில்லை. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இப்பகுதிக்கு செவிலியரை நியமிக்க வேண்டும் என்றார்.

Tags : women ,nurses ,health center ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...