×

மாவட்டம் மேய்ச்சல் நிலம் கருகி விட்டதால் கால்நடைகளின் தீவனத்திற்கு சிக்கல் கஷ்டப்படும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம், மே 17: ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தண்ணீர் இல்லாததால், வயல்வெளிகளில் பச்சை புல், புதர்கள் கூட முளைக்காததால் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு அலைமோதுகிறது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதி முழுவதும் கடந்த 4 ஆண்டாக மழை இல்லாத காரணத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் வருவாய் இழந்த விவசாயிகள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற ஆடுகள் மற்றும் பசு மாடுகளையும் வாங்கி வளர்த்து வருகின்றனர்.

ஆனால் அந்த ஆடு, மாடுகளுக்கு சரியான முறையில் பசும் புற்கள் மற்றும் தீவனங்களை கொடுக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். வேறு வழி இல்லாமல் வயல்வெளிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விரட்டி அனுப்பி விடுகின்றனர். ஆனாலும் கண்மாய், குளம் குட்டை, வயல்வெளிகள் எங்குமே மேய்ச்சலுக்கு புதர்கள் இல்லை. இதனால் ஆடுகளும் மாடுகளும், வயல்வெளிகளில் கருகி சருகாக உள்ள புல், புதர்களை அலைந்து தின்னும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மனிதனுக்கு கால்நடைகளுக்கும் கூட உணவு பஞ்சம் வந்து விட்டதாக பொதுமக்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்.

Tags : district ,land ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...