×

நெடுஞ்சாலை பராமரிப்பை தனியாருக்கு வழங்கக்கூடாது சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

பழநி, மே 17: நெடுஞ்சாலை பராமரிப்பை தனியாருக்கு வழங்கக்கூடாதென நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். கோட்ட இணை செயலாளர் பாலமுருகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணைத்தலைவர் செல்வம் வரவேற்று பேசினார். கோட்ட செயலாளர் மணிமாறன் பொதுக்குழு விளக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தர ஊதியமாக ரூபாய் 1900 வழங்கிட வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு மாத ஊதியம் கருவூலம் மூலம் நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Road Traffic Association ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்