×

தேவையற்ற பிரச்னைக்காக மோதிக் கொள்வதை நிறுத்திவிட்டு அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

வத்தலக்குண்டு, மே 17: அரசியல்வாதிகள் தேவையற்ற பிரச்னைக்காக மோதிக் கொள்வதை நிறுத்திவிட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலக திறப்பு விழா நடந்தது. சட்ட ஆலோசகர் வக்கீல் பழனிக்குமார் திறந்து வைத்தார். அதன் பின்னர் மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைைமயில் கூட்டம் நடந்தது.

அதில் மக்கள் நீதி மைய்ய தலைவர் கமலஹாசன் மற்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் மற்ற சில அரசியல்வாதிகளும் தேவையற்ற பிரச்னைக்காக மாறி, மாறி மோதிக் கொள்வதை நிறுத்திவிட்டு மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க பாடுபடவேண்டும். அரசியல்வாதிகள் தங்களது திறமையை, துணிச்சலை நதிகள் இணைப்பு போன்ற விவசாயிகளுக்கு நன்மை தரும் திட்டங்களில் வெளிக்காட்ட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.

Tags : politicians ,population ,
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்