×

தேக்வாண்டோ பயிற்சி முகாம் நிறைவு

திண்டுக்கல், மே 17: திண்டுக்கல்லில் தேக்வாண்டோ கோடைகால பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. திண்டுக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள சாகர் மெடிக்கல் காம்ப்ளக்ஸில் தேக்வாண்டோ கோடைக்கால இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.இம்முகாம் கடந்த 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. இதில் 62 பேர் பங்கேற்றனர். பயிற்சியின் நிறைவு நாளான நேற்று அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்
பட்டது.

இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சௌந்தரராஜன், திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்க தலைவர் ஜோதிமுருகன், மாநில துணை செயலாளர் ஜோதிபாசு, சாகர் மெடிக்கல் உரிமையாளர் நாசர்கான், தொழிலதிபர் கணேஷ் கண்ணா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Training Camp ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்