பழநி அருகே முத்தாலம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் பங்கேற்பு

பழநி, மே 17: பழநி அருகே பாலசமுத்திரத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக முத்தாலம்மன் கோயில் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாட்டுதலுடன் துவங்கியது. பக்தர்கள் விரதமிருந்து, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. கேரள பராம்பரிய இசையுடன், வாண வேடிக்கைகளுடன் அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

ஊர்வலத்தின்போது பல்வேறு சமூகத்தினரின் மண்டகப்படிகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி போன்றவற்றுடன் ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீச்சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை முத்தாலம்மன் ராமநாத நகர் சென்று கொழுவிருக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறும். விழாவைக் காண பழநி பகுதி கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>