×

பள்ளி விபரங்களை பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் தான் ‘கெடு’

திண்டுக்கல், மே 17: பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய முழு தகவல்களை அறிய இ.எம்.ஐ.எஸ்., (எஜிகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) கொண்டு வரப்பட்டது. அதில் ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்களை சேகரித்து பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களின் விபரங்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றி விபரங்களை பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் விபரங்களை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றி விபரங்களை அடையாளம் காணும் வகையில் புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பயன்பாட்டாளர் பெயர், கடவுச் சொல் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி விபரங்களை பதிவு செய்யலாம். இந்த பணிகளை மூன்று நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...