×

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து சென்று வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

மன்னார்குடி, மே 17: தஞ்சை மக்களவை தொகுதிக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள இந்த தேர்தலில் புதிதாக அறிமுகப்டுத்தப்பட்ட விவி  பேட் இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புக்கிடையில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.  வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. இந்நிலையில்  தஞ்சை எம்பி தொகுதிக்குப்பட்ட  மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கு  வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, நெடுஞ்சாலை துறைகளை சேர்ந்த  18 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், 18 உதவி அலுவலர்கள், 14 மைக்ரோ அப்சர்வர்கள் ஆகிய 52 பேரை மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான புண்ணிய கோட்டி நியமனம் செய்துள்ளார்.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் அலுவலர்களுக்கு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வகுப்பிற்கு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் புண்ணிய கோட்டி தலைமை வகித்தார். இதில் சமூகநலத்துறை தனி வட்டாட்சியர் அன்பழகன், வட்டாட்சியர்கள் மன்னார்குடி  லெட்சுமி பிரபா, நீடாமங்கலம் ஷீலா, கூத்தாநல்லூர் மகேஷ்,  தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் இளங்கோவன், ஜெகதீசன் பங்கேற்று பயிற்சியளித்தனர்.

இப்பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழிமுறைகள் மற்றும் விவி  பேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ணும் முறை மற்றும் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் தபால் ஓட்டுக்களை மின்னணு முறையில் மாற்றுவதற்கான ஏற்பாட்டு முறை தொடர்பான வழிமுறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Mannargudi Legislative Assembly ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்