×

வெயிலின் தாக்கம் இருக்கும் திருவாதவூரில் திருமறைநாதர் திருக்கல்யாணம்

மேலூர், மே 17: திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான மேலூர் திருவாதவூர் வேதநாயகி அம்பாள் உடனுறை திருமறைநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழா கடந்த மே 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து மே 13ல் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி மேலூருக்கு எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா நடைபெற்றது.

நேற்று கோவிலின் உள்மண்டபத்தில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன், பேஸ்கார் திரவியகுமார் செய்திருந்தனர்.

Tags : Thirumurai Nathar Thirukalayana ,
× RELATED வயல்களில் இலவச மண் பரிசோதனை