×

பாணாபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருக்கல்யாண உற்சவம்

கும்பகோணம், மே 17:  கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கும்பகோணத்தில் பாணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. உலக புகழ்பெற்ற மகாமகம் திருவிழாவுடன் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா 30 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இந்நிலையில் இந்தாண்டு பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கடந்த 9ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதைதொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழாவான நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (17ம் தேதி) தேரோட்டம் நடககிறது. நாளை கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

Tags : Vishnu ,
× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்