×

மத்திய அரசின் ஊர்ஜா திட்டத்தின் கீழ் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர், மே 17: திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவையொட்டி தேர் வலம் செல்லும் பாதைகளில் மத்திய அரசின் ஊர்ஜா மின் திட்டத்தின் கீழ்பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாநகர் பகுதியின் பல்வேறு மெயின் ரோடுகளில் போக்குவரத்து இடையூறாக மின் கம்பங்கள் அமைந்துள்ளன. இந்த கம்பங்கள் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் ் அவதிப்படுகின்றனர். பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்க பூமிக்கடியில் மின் கேபிள்களை பதிக்க வேண்டுமென பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் ஊர்ஜா மின் திட்டத்தில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், மின் புதைவடம் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக திருப்பூர் அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோயில்வீதி,

பழைய ஜவுளிக்கடை வீதி ஆகிய தேர்வீதிகளில், மின் புதை வடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவையொட்டி  தேர் பவனி நடப்பது வழக்கம். இதற்காக வணிக வளாகங்கள், குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புக்கான ஒயர்களை தற்காலிகமாக துண்டித்து மின் தடை ஏற்படுத்தி வீதிகளில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து  இழுத்து வந்தனர்.  மின் தடையால் பொது மக்கள், வணிக வளாக உரிமையாளர்கள் சிரமப்பட்டனர். இதை தவிர்க்கும் விதமாக பூமிக்குள் மின் கேபிள் பதிக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்தி உள்ளனர். பிரதான மின்வடம் அமைக்கப்பட்ட பின், இணைப்பு பெட்டியில் இருந்து, வீடு, கடை, வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளனர். இதனால் பொது மக்கள், வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சாலை சீரமைப்பு பணி
நெடுஞ்சாலை  துறை  சார்பில்,  திருப்பூர்  பெருமாள்  கோயில்  அருகே   ரோடு  சீரமைக்கும்  பணி  நேற்று  நடந்தது.

Tags : Central Government ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....