×

(வெள்ளிக்கிழமை தோறும்) தொகுதி முழுவதும் கிராமங்கள் தான் ஓட்டப்பிடாரம் வளர்ச்சி காணுமா?

ஓட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் கிராமங்களே இடம்பெற்றுள்ளன. இந்த இடைத்தேர்தல் மூலமாவது தொழில் வளர்ச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், வருகிற 19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு ஓட்டப்பிடாரம்,  தூத்துக்குடி, வைகுண்டம், கயத்தாறு ஆகிய 4 தாலுகா பகுதிகளும் அடங்கியுள்ளன.

ஓட்டப்பிடாரம்  தாலுகாவில் மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசடி, வாலசமுத்திரம், ஓட்டப்பிடாரம், குலசேகரநல்லூர், முறம்பன், ஒட்டநத்தம்,  கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி,  கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம்,  மேலப்பாண்டியாபுரம், சவரிமங்கலம், ஐம்பு, இங்கபுரம், புதியம்புத்தூர்,  சாமிநத்தம், தெற்கு வீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர் பாண்டியாபுரம்,  கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி,  கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும்  பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி பகுதிகளும்,

தூத்துக்குடி தாலுகாவில்,  உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, ராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம்,  பேரூரணி, அல்லிகுளம், தெற்கு சிலுக்கன்பட்டி, மறவன்மடம், செந்திலாம்பண்ணை,  கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, ராமநாதபுரம், முடிவைத்தானேந்தல்,  குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலயன்கரிசல், அய்யனடைப்பு  மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள், மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்) மற்றும்  அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்) ஆகிய ஊராட்சி பகுதிகளும் அடங்கியுள்ளது.'

 வைகுண்டம் தாலுகாவில் ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம், செக்காரக்குடி,  வடக்கு காரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு,  கோவில்பத்து, வடவல்லநாடு, கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம்,  எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, அனவரதநல்லூர், தன்னூத்து, வல்லநாடு  (கஸ்பா), கீழப்புத்தநேரி, வசவப்பபுரம், ஆழிகுடி, முறப்பநாடு  புதுக்கிராமம், நாணல்காடு, மணக்கரை, விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி  மற்றும் விட்டிலாபுரம் கோவில்பத்து என கிராம பகுதிகளாகவே இடம்பெற்றுள்ளது.

ஓட்டப்பிடாரம்  சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் 1989ம் ஆண்டு திமுக வெற்றி  பெற்றுள்ளது. 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில்  அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்று வந்துள்ளது. தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் இத்தொகுதியை கைப்பற்ற திமுக தீவிர களப்பிரசாரம் மேற்கொண்டு உள்ளது. அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய 7 அமைச்சர்கள் தொகுதியில்  முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர். இதேபோல் அமமுக, மக்கள் நீதிமய்யம் என மொத்ததம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்கள் அனைவருமே வெற்றி பெற்றால் ஒட்டப்பிடாரம் சொர்க்கபுரியாக மாற்றுவோம் என உறுதியளித்து வருகின்றனர். இதுவரை குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத கிராமங்கள் உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் மூலமாவது அரசியல் கட்சிகளின் கவனம் பெற்று தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே ஓட்டப்பிடாரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : villages ,village ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு