கோவையில் கமல்ஹாசன் மீது 5 பேர் போலீசில் புகார் மனு

கோவை, மே 17:  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் எனக்குறிப்பிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி போலீஸ் ஸ்ேடஷனில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ேகாவிந்தன் தலைமையில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு தரப்பட்டது. கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இந்து முன்னணி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் புகார் அளித்தார்.

அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் குட்டி ராஜேந்திரன் என்பவரும், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அசோக்குமார், துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் மணிகண்டன் என்பவரும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். சாலையில் தேங்கிய மழைநீர் கோவை மாநகர் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. கோவை  மருதமலை சாலையில் வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே தேங்கி நின்ற மழைநீர்.

× RELATED பள்ளிகளில் குற்றங்களை தடுக்க புகார்...