×

பேராசிரியர் மு.பி.பா. நூலக திறப்பு விழா

தென்காசி, மே 17: தென்காசியை அடுத்த அய்யாபுரத்தில் பேராசிரியர் மு.பி.பா.80வது முத்து விழாவை முன்னிட்டு நூலக திறப்பு விழா மற்றும் அறக்கட்டளை தொடக்க விழா நடந்தது. பட்டிமன்ற நடுவர் சாலமன்பாப்பையா பங்கேற்றார். அய்யாபுரம் அம்மன் கோயில் அரங்கத்தில் நடந்த விழாவிற்கு பட்டிமன்ற நாயகம் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமை வகித்தார். மணிக்கட்டி பொட்டல் சாகித்ய அகாடமி விருதாளர் பொன்னீலன் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் தூத்துக்குடி அழகேசன், பாளை வளன்அரசு, நாகர்கோவில் ஜாஸ்மின்ஆசிர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் மு.பி.பா.80வது முத்து விழாவை முன்னிட்டு மு.பி.பா - இன்பவல்லி தம்பதியினர் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து பேராசிரியர் மு.பி.பா.ஏற்புரை வழங்கினார். விழாவில் நலிந்த ஆடவர் 80 பேருக்கு வேஷ்டிகளும், பெண்கள் 80 பேருக்கு சேலைகளும், அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேருக்கு தேவையான நோட்டு புத்தகம், எழுது பொருட்களை சாலமன் பாப்பையா வழங்கி சிறப்புரையாற்றினார்.

மு.பி.பா.அறக்கட்டளை அறங்காவலர்கள் இன்பவல்லி, கலையரசி, முத்துக்குமரன், முத்தமிழ்செல்வன், அன்புச்செழியன், மணிவண்ணன், நெறியாளர்கள் இசக்கியம்மாள், செல்லா நிக்கல்சன், ராசசேகரன், கமலம் நடராசன், பாப்பாலிங்கம், குமரேசன், மணிப்பூஞ்செல்வி, சோபியா ரேச்சல்மேரி, கணபதிராமன், திருவள்ளுவர் கழகம் சிவராமகிருஷ்ணன், குற்றாலம் பேச்சிமுத்து, செங்கோட்டை நூலகர் ராமசாமி, தேசிங்குராஜன், முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக அய்யாபுரம் காந்தி தெருவில் மு.பி.பா.நூலகத்தை பொன்னீலன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், கலை, இலக்கியம், நாவல்கள், போட்டி தேர்வுகள் கையேடுகள், சிறுகதைகள், வரலாற்று நூல்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்பாடுகளை மு.பி.பா.அறக்கட்டளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Prof. Library ,opening ceremony ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா