×

7 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்

காரைக்கால், மே 17: கடந்த 25 மாத சம்பளம் கேட்டு, 7 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ரேஷன்கடை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். புதுச்சேரி காரைக்கால் கூட்டுறவு ரேஷன்கடை ஊழியர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய 25, மாத சம்பளத்தை கேட்டு, கடந்த 7 மாதமாக பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி கூட்டுறவு துறை அமைச்சர் கந்தசாமி, பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்க வேன்டிய சூழ்நிலையில் இருப்பதால், ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், முதல் கட்டமாக, 3 மாத ஊதியம் வழங்குவதாக உறுதி அளித்து சம்பளமும் போடப்பட்டது. இந்நிலையில், காரைக்காலில் நேற்று முன்தினம் 7 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ரேஷன்கடை ஊழியர்கள், காரைக்கால் கூட்டுறவு ரேசன்கடை ஊழியர்கள் போராட்டகுழு சங்க செயலாளர் மனோகர் தலைமையில் பணிக்கு திரும்பினர். தொடர்ந்து, திருநள்ளாறு தொகுதியில் இலவச அரிசியை அவர்கள் வழங்கினர்.

Tags : ration shop workers ,strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து