×

டெங்கு நோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நாகை, மே17:  நாகை நகராட்சி எல்லையில் டெங்கு நோய் பரவாமல் இருக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக டெங்கு நோய் ஒழிப்பு உறுதிமொழி நாகை நகராட்சி அலுவலகத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. நகராட்சி பொறுப்பு ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்போம். டெங்கு நோயை பரப்பும் ஏடிஎஸ் கொசுபுழுவை ஒழிப்போம். தேங்காய் சிறட்டை, தேவையில்லாத டயர்கள் உள்ளிட்டவற்றை அழிப்போம் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. நகர்நல அலுவலர் பிரபு, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், செல்லத்துரை, சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...