×

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம்

காரைக்கால், மே 17:  காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், சனி பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில், மழை வேண்டி நேற்று வருண ஜெபம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானை சுற்றி புதிதாக தொட்டி போன்று சுவர் கட்டப்பட்டு, விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேவாரம், வேதமந்திரங்கள், நாதஸ்வரம் இசைக்க கோயிலில் உள்ள கிணற்று நீரால் நந்தி பகவான் பாதி அளவு மூழ்கும் வகையில் நிரப்பப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் உலக நலன் மற்றும் மழை வேண்டி ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம்.  சுந்தராம்பாள்  உடனமர்  கைலாசநாதர் அர்த்த ஜாம வழிபாட்டு மன்றத்தினர் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி  காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை தொடர்ந்து கலசங்கள் வைக்கப்பட்டு ஏகாதச ருத்ர ஹோமம் தொடங்கி நடைபெற்றது. பின்னர் மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. ஹோமத்தில் வைக்கப்பட்ட புனிதநீரைக் கொண்டு சுவாமிகளுக்கு மகா ஸ்தபன அபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...