×

வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் மண்ணில் புதைந்து வீணாகும் பழுதான ரோந்து வாகனங்கள்முறையாக ஏலம் விடப்படுமா?

வேதாரண்யம்,  மே 17: வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் மண்ணில் புதைந்து வீணாகும் பழுதான ரோந்து வாகனங்களை முறையாக ஏலம் விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் கடலோர காவல் குழுமம்   உள்ளது.  அங்கு ஒரு துணை கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர், காவலர்கள் என 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.  இங்கு பணிபுரியும் காவலர்கள் நாள்தோறும் கடற்கரை ஓரங்களில் ரோந்து பணி மேற்கொண்டு அன்னியர்களின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பது, கடத்தல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.  இவர்களுக்கு ரோந்து செல்வதற்காக வானங்கள் ஒதுக்கப்படுகின்றனர்.  தற்போது நாள்தோறும் மூன்று   வாகனங்கள் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரோந்து பணி மேற்கொண்ட மூன்று வாகனங்கள் பழுதடைந்து விட்டது.   அதனை கடலோர காவல்படை துணைக் கண்காணிப்பு அலுவலர்  அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டது.  தற்போது இந்த வாகனங்கள் நிறுத்தி உள்ள இடத்தில் கருவை காடுகள் மண்டி வாகனமே தெரியாத அளவிற்கு உள்ளது.  மேலும் வாகனம் முற்றிலும்  துருபிடித்து மக்கி சிதைந்து வருகிறது.  அரசு வாகனங்கள் வீணாகி மண்ணோடு மண்ணாக போவது மிகுந்த வேதனை அளிக்கிறது.   


இந்த வாகனங்களை பழுதடைந்தவுடன், பழுதை நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் அல்லது பயன்படுத்த முடியாவிட்டால் அரசின் வழக்கமான முடிவின் படி இந்த வாகனங்களை உரிய ஏலத்தில் விடலாம்.  அப்படி உரிய நேரத்தில் ஏலமிட்டால் ஏலத்தில எடுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும். எனவே கருவைக் காட்டுக்குள் புதையுண்டு போய்யுள்ள வானங்களை அகற்றி ஏலமிட  காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bidder ,police station ,Vedaranyam ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை