நெல்லையில் மொபட் மீது கார் மோதல் மீன் வியாபாரி சிறுவன் படுகாயம்

நெல்லை, மே 17: நெல்லையில் மொபட் மீது கார் மோதியதில் மீன் வியாபாரி மற்றும் சிறுவன் படுகாயம் அடைந்தனர். நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரி (50). மீன் வியாபாரி. இவரும் உறவினர் மகனான சிறுவன் ஒருவரும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணார்பேட்டை நோக்கி நேற்று காலை மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். தெற்கு பைபாஸ் சாலை பாளையங்கால்வாய் பாலம் அருகே சென்றபோது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி அதிவேகமாக வந்த கார், மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டில் வந்த ஹரி மற்றும் சிறுவன் ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED செங்கல்பட்டு அருகே பைக்குகள் மீது கார் மோதி விபத்து