×

குளக்கரை கடைகளால் ஆபத்து

நாகர்கோவில் கரியமாணிக்கபுரம், புத்தேரி பெரியகுளம், நாக்கால்மடம், கொட்டாரம், கன்னியாகுமரி, பார்வதிபுரம், சுங்கான்கடை, தோட்டியோடு வில்லுக்குறி உள்பட குளங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் குளிர்பானம் மற்றும் பழக்கடைகள், துணிக்கடைகள், காய்கறி கடைகள் ஆயிரக்கணக்கில் அமைந்துள்ளன.  இதில் பல கடைகள் மின்இணைப்புடன் நிரந்தரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கடைகளை எதிர்காலத்தில் மாற்ற வேண்டிய நிலை வரும்போது, இப்போது குளத்திற்குள் வீடு கட்டியுள்ளவர்கள், மாற்று இடம் கேட்டு போராடுவதுபோல், இவர்களும் போராடும் நிலை ஏற்படலாம். எனவே பாரபட்சமின்றி மாவட்டம் முழுவதும் நீர் நிலைகள் பகுதியில் உள்ள கடைகளை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Tags : bathroom shops ,
× RELATED கணவர் மறைவால் குடும்பம் நடத்த சிரமம் 3...